Friday, 26 August 2011

Settinadu parupu thuvayal

                                               செட்டிநாடு பருப்பு துவையல்:

தேவையான பொருட்கள்:

               துவரை பருப்பு (அ) பாசி பருப்பு- 1 /4 கப், மிளகாய் வற்றல்-2 , புளி- சிறிதளவு, தேங்காய் சில் ஒன்று, பூண்டு- 2 பல், உப்பு தேவையான அளவு.

செய்முறை:
                    
          கடாயில் பருப்பை பொன்னிறமாக வறுக்கவும். பின் மிளகாய்  வற்றலையும் சேர்த்து வறுக்கவும். ஆறியதும் புளி, தேங்காய், உப்பு சேர்த்து மிக்சியில் போட்டு கொஞ்சம் தண்ணீர் விட்டு கெட்டியாகவும், கரகரப்பாகவும் அரைத்துக்கொள்ளவும். கடைசியில் பூண்டு  சேர்த்து ஒருமுறை அரைத்துக்கொள்ளவும். சுவையான செட்டிநாடு பருப்பு துவையல் தயார்.             

No comments:

Post a Comment