மஷ்ரூம் பிரியாணி
தேவையான பொருட்கள்:
பிரியாணி அரிசி, மஷ்ரூம்- தலா 1 / 4 கிலோ, பட்டை - 5 , ஏலக்காய், கிராம்பு, பிரிஞ்சி இலை- 2, பூண்டு - 10 பல், பச்சை மிளகாய் - 4 , இஞ்சி ஒரு சிறிய துண்டு, பெரிய வெங்காயம், தக்காளி - தலா ஒன்று, தயிர் கால் கப், எலுமிச்சை பழம் -1 / 2, நெய்- 2 டேபிள் ஸ்பூன், கொத்தமல்லி, புதினா கால் கப் , உப்பு- தேவையான அளவு.
செய்முறை:
மஷ்ரூம், தக்காளி, வெங்காயத்தை நறுக்கவும். இஞ்சி, பூண்டை விழுதாக அரைக்கவும், கடாயில் நெய் விட்டு பட்டை கிராம்பு, ஏலக்காய் தாளித்து அதில் பச்சை மிளகாய், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம் உப்பு சேர்த்து வதக்கி தயிர் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அதில் மஷ்ரூம் சேர்த்து வதக்கி, அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து. அரிசியை போடவும். அரிசி பாதி வெந்ததும் எலுமிச்சம்பழத்தை பிழிந்து விடவும். பின், புதினா, கொத்தமல்லி சேர்த்து, அரிசி முக்கால் பதம் வெந்ததும் மூடிவிடவும். பதினைந்து நிமிடங்கள் தம் போட்டு வைத்து பின் மூடியை அகற்றி நன்றாக கிளறிவிடவும். மஷ்ரூம் பிரியாணி ரெடி..
No comments:
Post a Comment